ADDED : மார் 08, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுாரில் வட்டார காங்., சார்பில் தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத எஸ்.பி.ஐ., வங்கியை கண்டித்து வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, மூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் வட்டார தலைவர் மலைக்கனி வரவேற்றார். அனைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக வசூலித்த நன்கொடை விவரங்களை ஸ்டேட் பேங்க் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும், வெளியிடாமல் பா.ஜ., அரசுக்கு ஆதரவாக செயல்படும் வங்கியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நகர தலைவர் சசிகுமார் நன்றி கூறினார்.

