நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த போடிநாயக்கன்பட்டி கடவுகாத்த அய்யனார் சுவாமி கோயில் காளை 'மாயா' வயது முதிர்வால் இறந்தது.
அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டிருந்த காளைக்கு கிராமமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த காளை அவனியாபுரம், அலங்காநல்லுார் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, கட்டில், பீரோ பரிசுகளும், பாலமேட்டில் சிறந்த காளையாகவும் தேர்வு செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்துச்சென்று மந்தையில் அடக்கம் செய்யப்பட்டது.

