/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரி மாணவர் கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு
/
கல்லுாரி மாணவர் கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு
ADDED : பிப் 05, 2024 01:35 AM
ஒத்தக்கடை: மதுரை, கடச்சனேந்தல் ஜெயவிலாஸ் கார்டன் குடியிருப்பில் வசிப்பவர் முகமது ரவுதீன். இவரது இரண்டா-வது மகன் பைசல் அப்துல்லா பவாத், 25. ஒத்தக்கடை அருகே உள்ள கல்லுாரியில் பி.டெக்., இறுதியாண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம், 28ல் வீட்டில் இருந்து சென்றவர் பின் திரும்பவில்லை என, ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் அளித்தனர்.
மதுரை, புதுாரை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அழகர் கோவில் அருகே பைசல் அப்துல்லாவை கடத்தி, கொலை செய்து, உடலை புதருக்குள் வீசியிருப்பது தெரிந்தது. போலீசார் நேற்று கொலை நடந்த இடத்திற்கு சென்று, அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

