ADDED : ஆக 13, 2025 02:24 AM
திருமங்கலம்; திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ரூ. 2.77 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் மே 5 முதல் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக மூடப்பட்டு தெற்கு தெரு பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
நகராட்சி பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை, அலுவலக அறை, பணியாளர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட்டு தளமும் புதுப்பிக்கப்படுகிறது. பஸ்ஸ்டாண்டைச் சுற்றியுள்ள கடைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இருமாதங்களில் பணி முடிவடையும் என துவங்கிய வேலை மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்தும் முடிந்தபாடில்லை.
நேற்று கலெக்டர் பிரவீன்குமார் பஸ் ஸ்டாண்ட் பகுதியை ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
மம்சாபுரத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 46.50 லட்சம் செலவில் கட்டப்படும் பூங்காவையும் ஆய்வு செய்தார். பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க, செடிகளை முறையாக பராமரிக்க உத்தரவிட்டார். சோழவந்தான் ரோட்டில் புதிதாக அமையும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார்.

