/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிட்டி ஸ்போர்ட்ஸ்: பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி
/
சிட்டி ஸ்போர்ட்ஸ்: பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி
சிட்டி ஸ்போர்ட்ஸ்: பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி
சிட்டி ஸ்போர்ட்ஸ்: பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி
ADDED : ஆக 01, 2025 02:13 AM

மதுரை: சென்னையில் மத்திய அரசின் கேலோ இந்தியா அஸ்மிதா பெண்கள் கிக் பாக்ஸிங் லீக் போட்டி, தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் நடந்தது.
இதில் 18 மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். இதில் பாயின்ட் பைட்டிங், புல் கான்டக்ட், லைட் கான்டாக்ட், கிக் லைட், மியூசிக்கல் பார்ம் உள்ளிட்ட ஏழு வகை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரையை சேர்ந்த மாணவியர் கலந்து கொண்டு 6 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்றனர். பாயின்ட் பைட்டிங் பிரிவில் ஆஷிகா, சாரா, கேசன்ட்ரா லாரா ஜோன், மோசிகா நாச்சியார், ஹர்ஷினி ஸ்ரீ தங்கம், கோபிகா, நம்ரதா, கிருஷ்ணா ஆதர்ஷினி வெள்ளி, சம்யுக்தா, ரியா, லக்ஷிதா, லித்திகா, ஜாய் பிரசன்னா, ஜீவிதா, முத்து பிரதிக்ஷா ஆகியோர் வெண்கலம் வென்றனர். லைட் கான்டாக்ட் பிரிவில் ஜீவிதா வெள்ளியும், தர்ஷினி வெண்கலமும் வென்றனர். கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் சம்யுக்தா தங்கமும், சாரா வெள்ளியும், வருணித்தா, ஹரிணி, வெண்கலமும் வென்றனர். மியூசிக்கல் பார்ம் பிரிவில் ஜாய் பிரசன்னா வெள்ளி வென்றார்.
வென்ற மாணவிகளை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், பயிற்சியாளர்கள் கவுரிசங்கர், முத்துக்குமார் பாராட்டினர்.