ADDED : டிச 24, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி தலைமையில் நடந்தது. அருளானந்தனர் கல்லுாரி பாதிரியார் பேசில் சேவியர் சிறப்புரையாற்றினார்.
மாணவிகள் டான்சிலா, பிருந்தா செலின் இறைவணக்க பாடல் பாடினர். மாணவப் பேரவை துணைத் தலைவர் சுசிராஸ்மி வரவேற்றார். ஏசுவின் குடில் அமைக்கப்பட்டு, அவரது பிறப்பு குறித்த பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல் நடன, நாடகம் நிகழ்ச்சிகள் நடந்தன.
துணை முதல்வர்கள் அருள்மேரி, வித்யா, பிந்து, நிகிலா, பேராசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் பங்கேற்றனர். மாணவப் பேரவையின் இணைச் செயலாளர் நிவேதா நன்றி கூறினார்.

