sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்று முதல் போர்வெல் ரிக் உரிமையாளர்கள் போராட்டம்

/

 இன்று முதல் போர்வெல் ரிக் உரிமையாளர்கள் போராட்டம்

 இன்று முதல் போர்வெல் ரிக் உரிமையாளர்கள் போராட்டம்

 இன்று முதல் போர்வெல் ரிக் உரிமையாளர்கள் போராட்டம்


ADDED : ஜன 19, 2026 05:19 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் போர்வெல் ரிக் உரிமையாளர்கள் இன்று (ஜன. 19) முதல் ஜன. 21 வரை மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

போர்வெல் தொழிலுக்கு தேவையான டிரில்லிங் பிட்டுகள் கார்பன் ஸ்டீலால் ஆனது. அது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அவற்றை ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்துள்ளதால் பிட்டுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தேவையான உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதால் போர்வெல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போர்வெல் சேவைக்கு விலை உயர்த்தப்படுவதை பொது மக்களுக்கும், அரசுக்கும் தெரியப்படுத்தும் வகையில் மதுரை கோச்சடையில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகம், அதன் எதிரே உள்ள சங்க அலுவலகம் முன் 3 நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர்.

மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள், ஏஜன்டுகள் நலச்சங்க தலைவர் சுரேஷ் கூறுகையில், ''கார்பன் ஏற்றுமதி தடையால் ரூ.24 ஆயிரத்துக்கு விற்ற ஒரு டிரில்லிங் பிட், ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. பணம் கொடுத்தாலும் பொருள் கிடைப்பதில்லை. இதனால் போர்வெல் சேவை விலையை 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டியுள்ளது. போராட்டத்தில் 80 லாரிகள் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்'' என்றார்.






      Dinamalar
      Follow us