ADDED : மார் 06, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் பேரூராட்சி வலசை கிராம ரோட்டில் சாத்தையாறு ஓடையில் ரூ.2.05 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி வரவேற்றார்.
இங்குள்ள சாத்தையாறு ஆற்றில் பழுதடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டும் என வலசை கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், செயல் அலுவலர் ஜூலான் பானு, துணைத் தலைவர் சுவாமிநாதன், கிராம தலைவர் கருப்பணன், முன்னாள் தலைவர் அழகு, பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

