/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஜாதிச்சான்று தராவிடில் மாற்றுச்சான்றை தாங்க' ; போராட்ட மாணவர்கள் முடிவு

ADDED : நவ 14, 2024 06:54 AM
வாடிப்பட்டி ; பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கன் ஜாதிச் சான்றிதழ் கேட்கும் மாணவர்கள் பெற்றோருடன் 7வது நாளாக தொடர் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவ.11ல் மதுரை மெயின் ரோட்டில் பவர் ஹவுஸ் எதிரே போராட்டத்தை துவங்கினர்.
ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டரிடம் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. தொடர்ந்து நேற்று முன் தினம் போராட்ட களத்திலேயே மதிய உணவை சமைத்து உண்டனர்.
இச்சமுதாயத் தலைவர் வீராங்கன் கூறுகையில், ''தொடர்ந்து பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பின்பும், கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.
ஆர்.டி.ஓ., கலெக்டர் உடனான பேச்சுவார்த்தையில் தீர்வு இல்லை. இன்று 10ம் வகுப்பு வரை படிக்கும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் சென்று 'டிசி' கேட்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.
நாளை (நவ.15) கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை, ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க உள்ளோம். பள்ளியில் படித்தால்தான் ஜாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். எனவே நாங்கள் மீண்டும் காட்டுக்கு செல்கிறோம்'' என்றார்.