ADDED : ஜன 06, 2026 06:15 AM
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பாக 'மீண்டும் மஞ்சப்பை' பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது. உதவி பேராசிரியை மணிமேகலை வரவேற்றார். முதல்வர் ராஜு தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் ஆகியோர் பேசினர். ஓட்டல் பார்க் பிளாசா குழும சேர்மன் கே.பி.எஸ். கண்ணன் பிளாஸ்டிக்கின் தீமைகளை விளக்கி, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்றார்.
விழிப்புணர்வு ஊர்வலம்: உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டியில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உசிலம்பட்டியில் தங்கியுள்ள தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் இணைந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகள், கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர்.

