நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க வைர விழா மற்றும் 61வது ஆண்டு விழா நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.
ஆலோசகர் அழகேசன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், யூனியன் சேர்மன் மகாலட்சுமி, அ.தி.மு.க., பேரூர் செயலாளர் அசோக்குமார் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், அன்னதானம் வழங்கப்பட்டது. பொருளாளர் ராமர் நன்றி கூறினார்.

