ADDED : செப் 07, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் மண்டல கலை இலக்கியப் போட்டிகள் நடந்தன.
முதல்வர் பாண்டியராஜா துவங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3ம் பரிசாக ரூ.2000 என ஆறு பிரிவுப் போட்டிகளுக்கும் சேர்த்து ரூ.60,000 பரிசாக வழங்கப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை, உதவிப்பேராசிரியர் சரவணஜோதி பரிசு வழங்கினர்.
பேராசிரியர்கள் செல்வக்குமார், கோவிந்த ராஜ் நடுவர்களாக செயல்பட்டனர். மாநில ஒருங் கிணைப்பாளர் பால சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ராமலிங்கம் பணிமன்றமும், தியாகராஜர் கல்லுாரியும் செய்திருந்தன.