/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்தாண்டுக்கு முன் பூட்டிய கடையில் மது
/
ஐந்தாண்டுக்கு முன் பூட்டிய கடையில் மது
ADDED : ஆக 25, 2025 02:53 AM
திருமங்கலம் : மதுரை சிக்கந்தர் சாவடியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையில் போலீசார் அந்த டாஸ்மாக் கடையில் சோதனையிட்டனர்.
அதில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அங்கிருந்த 2 நபர்களில் ஒருவர் போலீஸ் வருவதை அறிந்து தப்பினார்.
பாட்டில்களை விற்ற செல்லுார் நீதியை கைது செய்து 243 மது பாட்டில்கள், ரூ.1400ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள், நீதியை திருமங்கலம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தப்பிய உசிலம்பட்டி முத்துராமனை தேடி வருகின்றனர்.