நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: அலங்காநல்லுாரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் அழகுராஜா வரவேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதய குமார் ஆலோசனை வழங்கினார். ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட விவசாய அணி குமார், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திர மணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு, வழக்கறிஞரணி நிர்வாகிகள் ராஜ்குமார், அழகர்சாமி, செந்துார் பாண்டி, காசிநாதன் பங்கேற்றனர். ஐ.டி.,பிரிவு பொறுப் பாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.

