நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் உதயகுமார், திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாநில செயலாளர் ஐஸ்வர்யா, மாநில இளைஞரணி செயலாளர் அரவிந்தன், கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் மக்கள் கட்சியை த.மா.கா., வில் இணைப்பது என்ற மாநில தலைவர் தமிழருவி மணியன் முடிவை மதுரை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி முழு மனதோடு வரவேற்கிறது. வரும் காலங்களில் மறைந்த ஜி.கே. மூப்பனாரின் வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற கருத்தை வலியுறுத்தி ஒன்றுபட்டு பாடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

