/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எழுமலையில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
/
எழுமலையில் கூடுதல் இயக்குனர் ஆய்வு
ADDED : மார் 09, 2024 07:44 AM
எழுமலை : எழுமலை பேரூராட்சி கோட்டைபெருமாள் கோவில் சாலையில் அமைந்துள்ள வளம்மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மட்கும், மட்காத குப்பையை கையாளும் பணிகளை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி ஆய்வு செய்தார்.
குடிநீர் விநியோகம் குறித்தும், கோடை காலத்தில் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மேக்கிலாங்கிணறு பகுதியில் நீராதாரங்களை பார்வையிட்டும் குடிநீர் பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்ப செயல் அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன், உதவி இயக்குநர் சேதுராமன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் செங்கதிர்செல்வம், செயல் அலுவலர் நீலமேகம் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

