/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.50 லட்சம் கொடுத்தால் ரூ.5 லட்சம் பள்ளி நோட்டுகளை கொடுத்து மோசடி; மதுரையில் 3 பேர் கைது

ADDED : டிச 19, 2025 07:16 AM
மதுரை: ராஜபாளையத்தில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்துபவர் வீரலட்சுமி 38. இவரது கடைக்கு அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள மங்களாபுரம் வேல்முருகன் 43, சோழபுரம் முருகன் 47, வந்து சாப்பிட்டனர். வீரலட்சுமிக்கு நல்ல அறிமுகமானவர் என்பதை சாதகமாக்கி கொண்ட முருகன், 'நான் சொல்லும் நபரிடம் ரூ.1.50 லட்சம் கொடுத்தால் பணத்தை இரட்டிப்பாக்கி ரூ.5 லட்சம் தருவார்கள்' எனக் கூறினார். இதை நம்பி முருகனிடம் 'அட்வான்சாக' வீரலட்சுமி ரூ.50 ஆயிரம் தந்தார்.
சில நாட்களுக்கு பின் அவரை தொடர்பு கொண்ட முருகன், 'மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு சென்று நான் சொல்லும் நபரிடம் ரூ.ஒரு லட்சம் கொடுங்கள்' என்றார். மகள், தங்கையுடன் மதுரை வந்த வீரலட்சுமியிடம் பஸ் ஸ்டாண்ட் முன்பு காத்திருந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ராஜன் 42, என்பவர் பணத்தை பெற்றுக்கொண்டு, 'அட்டை பெட்டியை கொடுத்து 'இதில் பணம் உள்ளது. வீட்டிற்கு போய்தான் திறந்து பார்க்க வேண்டும்' என்று கூறி சென்றார். சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்த வீரலட்சுமி உள்ளிட்டோர் அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது 40 பக்கம் எழுதும் நோட்டு புத்தகங்களை அடுக்கி மோசடி செய்தது தெரிந்தது.
இதுதொடர்பாக வேல்முருகன், முருகன், ராஜன் ஆகியோரை புதுார் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளதா என விசாரணை நடக்கிறது.