நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : விருதுநகர் லோக்சபா தொகுதியில் உள்ள திருமங்கலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியின் தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருமங்கலம் ஒன்றியம் மறவன் குளம், காங்கேய நத்தம், கள்ளிக்குடி ஒன்றியம் சிவரக்கோட்டை பகுதியில் அவர் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் துரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், தே.மு.தி.க., செயலாளர் கணபதி, நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

