/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்று துறைகளில் ஆய்வு நடத்த உதயநிதிக்கு அதிகாரம் உள்ளதா உதயகுமார் கேள்வி

ADDED : செப் 13, 2024 05:26 AM
திருமங்கலம்: 'தமிழக முதல்வரின் மகன் என்பதால் மாற்றுத் துறைகளில் ஆய்வு நடத்த அதிகாரம் உள்ளதா' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் டி.புதுப்பட்டியில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
மதுரை, சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி மாற்றுத் துறைகளில் ஆய்வு செய்து அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். சிலரை பணிநீக்கம் செய்துள்ளார். அனைத்து துறைகளையும் ஆய்வு செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது. சிறப்பு திட்ட செயலாக்க துறையில் அனைத்து துறையையும் ஆய்வு செய்கிற ஏமாற்று வேலையை செய்கின்றனர். இரண்டு அதிகாரிகளை பணி நீக்கம் செய்கிறார். இது என்ன சர்வாதிகார நாடா.அனைத்து துறைகளையும் ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியராக இருக்க வேண்டும் அல்லது முதல்வராக இருக்க வேண்டும்.
அ.தி.மு.க., வின் 10 ஆண்டு ஆட்சியில் 24 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியவர், அ.தி.மு.க., ஆட்சியில் இப்படி வழங்கினரா என கேட்டுள்ளார். அ.தி.மு.க., வழங்கியது குறித்து வருவாய் துறை மானிய கோரிக்கையில் உள்ளது என்றார்.