sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - செப். 16

/

இன்றைய நிகழ்ச்சி - செப். 16

இன்றைய நிகழ்ச்சி - செப். 16

இன்றைய நிகழ்ச்சி - செப். 16


ADDED : செப் 16, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆவணி மூலத் திருவிழா 12ம் நாள்- பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும் சுவாமியும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வடக்காடி வீதி 16 கால் மண்டபம் சேர்தல், மாலை 6:00 மணி, திருப்பரங்குன்றம் சுப்பரமணிய சுவாமியும் திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் குதிரை வாகனத்தில் 16 கால் மண்டபத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரிடம் விடைபெறுதல், இரவு 7:00 மணி.

முளைப்பாரி திருவிழா: மாரியம்மன் கோயில், தல்லாகுளம், மதுரை, தங்கும் முளைப்பாரி, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர்- திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

நாம சங்கீர்த்தனம், பக்தவிஜயம் ப்ரவசனம்: நிகழ்த்துபவர் - சங்கர் ஜி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சைதன்ய விட்டல் மந்திர் ஸமஸ்தான், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

ஸ்ரீ சங்கரர் சரித்திரம்: நிகழ்த்துபவர்- சுந்தரராம தீட்சிதர், வசுதாரா குடியிருப்பு வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

பொது

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஜெயந்தி விழா, இசைக் கச்சேரி: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, சங்கீத வித்வான் ராமகிருஷ்ணன் மூர்த்திக்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி விருது வழங்கும் விழா, குரலிசை - ராமகிருஷ்ணன் மூர்த்தி, வயலின் - ராமகிருஷ்ணன், மிருதங்கம் விஜய் நடேசன், பங்கேற்பு: நடிகை ரேவதி சங்கரன், மாலை 6:00 மணி.

கண்காட்சி

புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, வரவேற்பு: தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் வானதி, பங்கேற்பு: பபாசி செயலாளர் முருகன், சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, மாலை 6:00 மணி.

வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

மருத்துவம்

கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.

உலக இதய தினத்தை முன்னிட்டு இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை.






      Dinamalar
      Follow us