/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு வைத்து வீசியதில் மூவர் காயம்
/
டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு வைத்து வீசியதில் மூவர் காயம்
டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு வைத்து வீசியதில் மூவர் காயம்
டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு வைத்து வீசியதில் மூவர் காயம்
ADDED : ஏப் 22, 2024 04:31 AM

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுார் அருகே கீழவளவில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டை டிபன் பாக்ஸில் வைத்து வீசியதில் ஒரு தரப்பை சேர்ந்தவரின் கைவிரல்கள் துண்டாயின. மேலும் இருவர் காயமுற்றனர். போலீசார் இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
கீழவளவைச் சேர்ந்தவர்கள் வெள்ளையத்தேவன் மற்றும் மகேஷ். இருவரும் மலேசியா சென்று திரும்பியவர்கள். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர். கீழவளவில் இருவர் தலைமையிலும் தனித்தனி கோஷ்டிகள் செயல்படுகின்றன.
ஏப்., 9 ல் அம்மன் கோயில் பட்டியில் நடந்த பூக்குழி திருவிழாவில் இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு மகேஷ் காரில் நவீன் இருந்த போது மற்றொரு காரில் வந்த வெள்ளையத்தேவன் தரப்பினர் டிபன் பாக்ஸில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கார் மீது வீசினர். இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின. காரிலிருந்து இறங்கிய நவீனை, வெள்ளையத்தேவன் தரப்பினர் கத்தியால் வெட்ட தடுக்க முயன்றார்.
இதில் அவரது வலது கையில் 2 விரல்கள் துண்டாயின. சம்பவம் நடத்த இடத்தில் கடை நடத்தும் சந்திரமூர்த்தி 42, ஆட்டோ டிரைவர் கண்ணன் 30, காயமடைந்தனர்.
சத்தம் கேட்டு ஆட்கள் வர வெள்ளையத்தேவன் தரப்பினர் காரில் தப்பினர். நவீன் மதுரையில் தனியார் மருத்துவமனையிலும், மற்ற இருவர் மேலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
கீழவளவு போலீசார் டிபன் பாக்ஸ் மற்றும் அதற்குள் இருந்த வெடிமருந்து, பால்ரஸ், ஆணி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையில் தனிப்படை அமைத்து வெள்ளையத்தேவன் அண்ணன் அசோக் 29, இடைஞ்சான் கண்மாய்பட்டி கார்த்திக் 27, ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர். தப்பிய வெள்ளையத்தேவன் தரப்பினரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,'வெள்ளையத்தேவன் மற்றும் மகேஷ் இடையே புகையிலை விற்பதில் முன்விரோதம் இருந்தது,' என்றனர்.

