ADDED : ஏப் 06, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் மதுரை மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:
மதுரைக்கு எத்தனை முறைதான் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவது. உதயநிதி ஒரு செங்கலை காண்பித்து கேள்வி கேட்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 ஆண்டுகளில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்து சம உரிமையை நிலைநாட்ட வேண்டும். வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும் என ராகுல் வாக்குறுதி கொடுத்துள்ளார். மாநில உரிமை பாதுகாக்கப்படும் என்றார்.

