/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : அக் 02, 2024 07:26 AM
மதுரை : வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிக்கின்றன. அதிக வேகம் மற்றும் மது அருந்தி வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அனைத்து மோட்டார் வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாடு கருவியை பொருத்த வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனத்தை கண்டறிய 'ஸ்பீட் கன்', 'ஸ்பீட் இன்டிகேஷன் டிஸ்பிளே' போன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் கோருபவர்களை விபத்திற்குள்ளானவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதனால் சாலை விதிகளை மீறுவதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகள் புரிந்து கொள்ள முடியும். வேகத்தடைகளை விதிகள்படி அமைக்க வேண்டும். விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு நடமாடும் மருத்துவ வசதி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய சாலை போக்குவரத்துத்துறை செயலர், தமிழக உள்துறை, போக்குவரத்துத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

