ADDED : மார் 24, 2024 06:05 AM
மதுரை : மதுரை சத்திரப்பட்டி - அழகர்கோவில் ரோட்டில் கியூபட்டி விலக்கு பகுதியில் சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், எஸ்.ஐ., பிச்சைப்பாண்டியன், ஏட்டு சுரேஷ், கீதா பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தெலங்கானா மாநிலம் அருண்குமார் காரில் ரூ.1.82 லட்சம் இருந்தது.
ஆன்மிக சுற்றுலா வந்ததாகவும், அழகர்கோவிலுக்கு செல்வதாகவும் தெரிவித்தார். ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். இதேபோல் தெற்கு தொகுதியில் கீழவாசல் செயின்ட் மேரீஸ் பள்ளி அருகே கார் ஒன்றில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
மேலுார்: பறக்கும்படை அதிகாரி ராஜ்குமார் தலைமையில் மதுரை ரோட்டில் காரை சோதனையிட்டனர். உரிய ஆவணமின்றி ரூ. 1.22 லட்சம் கொண்டு சென்றது தெரிந்தது.
ஒத்தக்கடை சுப்பிரமணியன் 55, மேலுார் கடைகளில் சிமென்ட் விற்ற பணத்தை வசூல் செய்ததாக தெரிவித்தார். உதவி தேர்தல் அலுவலர் ஜெயந்தி முன்னிலையில் கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

