/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் தண்ணீர் திறந்து வீணடிப்பு மீன் வளர்ப்போரால் குடியிருப்போர் அவதி

ADDED : மார் 30, 2024 04:08 AM

மதுரை : மதுரையில் மீன் பிடிப்பதற்காக கண்மாயை திறந்து விட்டதால் தண்ணீர் வீணாவதோடு, குடியிருப்புகளை சூழ்ந்து நின்று அவதியை ஏற்படுத்தி வருகிறது.
ஆனையூர் அருகே உள்ள சிலையநேரி கண்மாய் மிளகரணை வரை 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு மீன் வளர்க்க தடையும் உள்ளது. ஆனால் சமீப காலமாக இங்கு சிலர் மீன் வளர்க்க ஏற்பாடு செய்து மீன்குஞ்சுகளை வாங்கி விட்டு, அவை வளர்ந்த நிலையில் பிடித்து விற்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக மீன்களை எளிதாக பிடிப்பதற்காக ஒருவாரமாக கண்மாய் தண்ணீரை வடியவிடும் வேலையில் ஈடுபட்டுஉள்ளனர்.
கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஆனையூர் கணபதி நகர், சஞ்சீவிநகர், சங்கீத்நகர், உழவர் சந்தை உட்பட பல பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் சுகாதார கேடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
கண்மாய் தண்ணீரை வெளியேற்றுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதுடன், தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிப்பும் உள்ளது. கோடை நேரத்தில் தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர்.