ADDED : ஜூலை 16, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் சுந்தரராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கே.ஜி., குழந்தைகளுக்கு அரசின் இலவச பாடப் புத்தகங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் வழங்கினர். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி திறன், மதிப்பீடு, கற்றலை மேம்படுத்தும் வகையில் நன்னெறிக் கல்வி கற்பித்தல் தொடர்பாக தனியார் அறக்கட்டளை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கீரைத்துறை பாரதிதாசனார் பள்ளியில் நடந்தது.
மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், அறக்கட்டளை நிர்வாகிகள் கலாவதி, சர்மிளா, கவுன்சிலர் முத்துமாரி, தலைமையாசிரியர் காசிராஜன், ஆசிரியர்கள் பரமசிவம், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

