/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்; கேட்டை பூட்டியதால் பொதுமக்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 17, 2024 12:36 AM

மதுரை : மதுரையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அலுவலக வாயிலில் முற்றுகையிட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாநிலம் முழுவதும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் நடந்த இப்போராட்டத்திற்கு மாநில பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். நகர் தலைவர் வீரமணி, செயலாளர் பாலமுருகன், மாவட்ட தலைவர் தவமணி, செயலாளர் முருகன், இணைச் செயலாளர் குமரவேல், துணைச் செயலாளர் சொர்ணவேல் பங்கேற்றனர்.
உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டா, அந்த்யோதயா திட்டத்தில் அரிசி வழங்குவதற்கான ரேஷன் கார்டு, நுாறுநாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் கலெக்டரை சந்திக்க வேண்டும் எனக்கூறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். வாயில் கேட்டை பூட்டியதால் அதன் முன் அமர்ந்தனர். சிலர் கட்டிலுடன் வந்து கலந்து கொண்டனர்.
சங்க பிரதிநிதிகள் கலெக்டர் சங்கீதா, நேர்முக உதவியாளர் சந்திரசேகரனை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். இதையடுத்து வடக்கு தாலுகா துணைத்தாசில்தார் சுந்தரவேல் போராடியவர்களிடம் பேசியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். நீண்ட நேரம் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.