/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மக்கள் மாற்றத்தை தருவார்கள்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் நம்பிக்கை

ADDED : ஏப் 15, 2024 01:38 AM
மதுரை : மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் ஆத்திகுளம், ரிசர்வ்லைன், இ.பி.காலனி, கண்ணணேந்தல் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
அவர் பேசியதாவது: மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, சமையல் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். எம்.பி.,யான வெங்கடேசன் 'எக்ஸ்' தளத்தில் அரசியல் நடத்துகிறார். தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடி ரூபாயில் ரூ.4.25 கோடி தான் செலவு செய்துள்ளார்.
தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. கம்யூனிஸ்ட்டுகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் 3 ஆண்டுகளில் மதுரை புறநகர் பகுதிகளில் எந்த திட்டங்களும் கொண்டுவரவில்லை. தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதே போல் மதுரையிலும் மக்கள் மாற்றத்தை தருவார்கள் என்றார்.