/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அய்யோ பாவம்... ஐ.எஸ்.ஓ., பஸ் ஸ்டாண்ட்
/
அய்யோ பாவம்... ஐ.எஸ்.ஓ., பஸ் ஸ்டாண்ட்
ADDED : ஏப் 20, 2024 05:48 AM

மதுரை: தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய பஸ் ஸ்டாண்ட்... ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற முதல் பஸ் ஸ்டாண்ட்... என பெருமை பெற்ற மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டின் இன்றைய நிலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது.
நடைமேடை வரை கழிவுநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் பரிதவிக்கின்றனர். கடைக்காரர்கள் 'கடுப்பாகின்றனர்'. போதுமான இருக்கை வசதி இல்லாமல் பயணிகள் இடம் தேடி அலைகின்றனர். இருக்கைகள் இருந்தால் அவை பயணிகளை குத்தி மிரட்டுகிறது.
ரூ.பல லட்சம் செலவழித்து அமைக்கப்பட்ட வழிகாட்டி 'டிவி'க்கள் வழிகாட்டி பல ஆண்டுகளாகிறது. நடைபாதையில் நாய்கள் படுத்திருப்பதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மதுரை நகர் வளர்ச்சி குறித்து அக்கறை காட்டும் மாநகராட்சி, இந்த ஐ.எஸ்.ஓ., பஸ் ஸ்டாண்டின் வளர்ச்சி, பராமரிப்பு குறித்தும் அக்கறை காட்ட வேண்டும்.

