/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாஸ்டர் பிளான் திட்டம்; கால அவகாசம் தேவை
/
மாஸ்டர் பிளான் திட்டம்; கால அவகாசம் தேவை
ADDED : ஏப் 02, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:
உள்ளூர் திட்டக்குழுமத்தின் புதிய மாஸ்டர் பிளான் 2021 - 2041க்கான வரைவு நில வகைப்பாடு ஏப்.,7க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தொழிற் சாலைகளுக்கான நிலங்கள் வீட்டு உபயோகமாகவும், வணிக மற்றும் விவசாய நிலங்களாக வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரைவு நிலையில் உள்ள புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தில் இவை அனைத்தையும் கண்டறிந்து திருத்துவதற்கு ஏப்.,7 க்குள் கால அவகாசம் போதாது.
இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

