/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினகரனை வெற்றி பெற செய்யுங்கள் அனுராதா உருக்கம்
/
தினகரனை வெற்றி பெற செய்யுங்கள் அனுராதா உருக்கம்
ADDED : ஏப் 12, 2024 05:08 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தேனி லோக்சபா தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தேனி தொகுதியின் செல்லப்பிள்ளையாக தினகரன் திகழ்கிறார்.
ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்ய செல்லும் போது மக்கள் நீங்கள் வந்தால் போதும், நல்லது செய்வீர்கள் என ஆதரவு தருகிறார்கள். 14 ஆண்டுகள் கழித்து தினகரன் இங்கு வந்தாலும் மக்கள் பாசம் வைத்துள்ளார்கள்.
குக்கர் சின்னம் குறித்து குழப்பம் வேண்டாம். வெற்றி பெற்றால் தொகுதிக்கு தேவையான திட்டங்களை அவர் கொண்டு வருவார்.
இத்தொகுதி மக்கள் தான் அவரது அரசியல் வாழ்க்கைக்கு வித்தாக இருந்துள்ளனர். இந்த முறையும் அவருக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

