/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டி போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு
/
வாடிப்பட்டி போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு
ADDED : மே 17, 2024 06:15 AM

வாடிப்பட்டி: தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் குற்றங்களை தடுக்க சிறப்பு விரைவு மீட்பு குழு எஸ்.பி., அரவிந்தன் உத்தரவில் கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
இக்குழுவில் உள்ள வாடிப்பட்டி எஸ்.ஐ.,க்கள் மாயாண்டி, உதயகுமார், ஏட்டு மாயக்கண்ணன், போலீசார் சந்தானகிருஷ்ணன், சவுந்தரபாண்டி, முருகபாண்டி ஆகியோர் மே 11 இரவு பாண்டியராஜபுரம் நான்கு வழிச்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கார் மற்றும் டூவீலரில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்ததில் திருப்பூரில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை புதைக்க இடம் தேடியது தெரிந்தது. பெண்ணின் உடலை மீட்டு இருவரையும் கைது செய்து திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாடிப்பட்டி விரைவு மீட்பு குழு போலீசாரை தென்மண்டல ஐ.ஜி., கண்ணன், எஸ்.பி., அரவிந்தன் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

