/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடி போய் ஆவணி வந்தால் காய்கறி விலை குறையுமாம்
/
ஆடி போய் ஆவணி வந்தால் காய்கறி விலை குறையுமாம்
ADDED : ஜூலை 16, 2024 04:15 AM
மதுரை, : மதுரையில் ஒரு மாதமாக கிலோ ரூ.100க்கு குறையாமல் முருங்கைக்காய் விற்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் வெண்டைக்காயும் புடலைங்காயும் விலை குறைவால் சமையலுக்கு கைகொடுக்கிறது.
தொடர் மழை, வரத்து குறைவால் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால் விலை சற்று கூடுதலாக உள்ளது. 'ஆடி போய் ஆவணி வந்தால் காய்கறி விலை குறையும்' என்கிறார் மதுரை மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன்.
அவர் கூறியதாவது: முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.100 முதல் ரூ.120க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் வரை பச்சை மிளகாய் கிலோ ரூ.120க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.70ஆக குறைந்தது. பீன்ஸ் ரூ.90, அவரை ரூ.60, கத்தரிக்காய் உட்பட மற்ற காய்கறிகள் விலை ரூ.50 முதல் ரூ.60க்கு விற்கப்பட்டது.
உள்ளூர் வரத்து என்பதாலும் விளைச்சல் அதிகரிப்பாலும் வெண்டைக்காய் கிலோ ரூ.15 - ரூ.20, புடலை ரூ.20 - ரூ.30க்கு விற்கப்படுகிறது. ஒரு மாதத்தில் உடுமலைபேட்டை, தேனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூர், சின்னமனுாரில் இருந்து வரத்து அதிகரித்து விடும். ஆடி 18க்கு மேல் காய்கறிகள் விலை குறைந்து விடும் என்றார்.

