/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்ய வேண்டும் வர்த்தக மைய நிகழ்ச்சியில் யோசனை
/
ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்ய வேண்டும் வர்த்தக மைய நிகழ்ச்சியில் யோசனை
ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்ய வேண்டும் வர்த்தக மைய நிகழ்ச்சியில் யோசனை
ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்ய வேண்டும் வர்த்தக மைய நிகழ்ச்சியில் யோசனை
ADDED : மார் 03, 2025 04:47 AM

மதுரை : 'எந்த தொழில் செய்தாலும் அது, ஏற்றுமதி சார்ந்த வர்த்தகமாக இருக்க வேண்டும்' என தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் பேசினார்.
மதுரை சிக்கந்தர் சாவடியில் 30 ஏக்கரில் வேளாண் உணவு வர்த்தக மையம் செயல்படுகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள உணவு பதனீட்டாளர்கள் உலகளவிலான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தரமான பொருட்கள் தயாரிக்கத் தேவையான கட்டமைப்புகளை இம்மையம் வழங்குகிறது. அதற்கு சான்றாக இதன் நுழைவு வாயிலில் 20 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட தென்னிந்தியாவிலேயே பெரிய இரும்பாலான பூமி உருண்டை (ஸ்டீல் குளோப்) அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா மையத் தலைவர் ரத்தினவேல் தலைமையில் நேற்று நடந்தது.
ஹரி தியாகராஜன் திறந்து வைத்து பேசுகையில், ''விவசாயத்தின் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. உணவு இன்றி ஒருநாளைக் கூட எண்ணிப்பார்க்க முடியாது. அவ்வகையில் கருத்தரங்கு கூடம், உணவு பதப்படுத்தும் குடோன், பரிசோதனை செய்யும் வசதி என நுணுக்கமாக இம்மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கும் வரப்பிரசாதம்.
இன்று உலகின் பார்வை நம் நாட்டின் மீதே உள்ளது. எனவே எந்த தொழில் செய்தாலும் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகமாக இருக்க வேண்டும். விவசாயிகள், வியாபாரிகள் உலகத்தோடு போட்டியிட வேண்டும். அதற்கு சான்றாக இந்த குளோப் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

