ADDED : ஏப் 26, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர்., ரோடு ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேதபாடசாலையின் ஆன்மிக இளைஞர் இயக்கம் சார்பில் கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளன.
பாடசாலையின் குரு ராமாச்சாரி கூறியதாவது: 6 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்., 28 முதல் மே 5 வரை தினமும் காலை 10:00 மணிமுதல் தினமும் இரண்டு மணிநேர வகுப்புகள் நடைபெறும்.கல்வி, ஞானம், ஞாபகசக்தி வளர, மன உறுதி உடல் உறுதி பெற, சாதனைகள் புரிய, ஹயக்ரீவர், விநாயகர், சரஸ்வதி, முருகன், தட்சிணாமூர்த்தி மந்திரங்கள், ஆஞ்சநேய துதி, காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம், ஹிந்து சமய விளக்கம் கற்றுத்தரப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ், பரிசும் தரப்படும் என்றார். தொடர்புக்கு 94421 47694.

