ADDED : ஏப் 03, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏப்., 15 முதல் இலவச விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் மற்றும் தடகள விளையாட்டுகளில் பயிற்சி பெற விரும்பும் 6 முதல் பிளஸ் 2 வரையான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஏப்., 15 முதல் காலை 6:00 முதல் 8:00 மணி வரையும் மாலை 4:00 முதல் 6:00 மணி வரையும் தொடர்ந்து 21 நாட்களுக்கு பயிற்சி நடக்கும்.
பால், முட்டை, பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் பெறலாம். விரும்புவோர் நேரில் பெயரை பதிவு செய்யலாம். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 50 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

