ADDED : மே 17, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு 38. இவர் மதுரையில் பலசரக்கு சாமான்களை வாங்கி திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி கடைகளுக்கு விநியோகம் செய்வது வழக்கம்.
நேற்று வேனில் சரக்குகளுடன் திருமங்கலத்தில் இருந்து கல்லுப்பட்டிக்கு சென்றார். டி.புதுப்பட்டி அருகே வேனில் இருந்து புகை வந்துள்ளது. வேனை நிறுத்தி பார்த்தபோது உள்ளே இருந்த பலசரக்கு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது. அவ்வழியாக வந்தவர்கள் உதவியோடு தீ அணைக்கப்பட்டது. இதில் வேனில் இருந்த பலசரக்குப் பொருட்கள் சேதம் அடைந்தன. வேனின் பக்கவாட்டுப் பகுதிகள் லேசான சேதத்தோடு தப்பியது.

