/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கம்பூரில் மாணவர்களுக்கு களப்பயிற்சி
/
கம்பூரில் மாணவர்களுக்கு களப்பயிற்சி
ADDED : செப் 17, 2024 04:46 AM
கொட்டாம்பட்டி: மதுரை இறையியல் கல்லுாரி மாணவர்களுக்கு கம்பூரில் ஒரு நாள் களப்பயிற்சி நடந்தது.
சின்னகற்பூரம்பட்டி செல்வராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் அட்லின் முன்னிலை வகித்தார். தங்கம் அடைக்கண், கேசம்பட்டி ஜீவா, விஜயராஜ், ராஜா, கல்லாணை சுந்தரம் பயிற்சி அளித்தனர்.
கம்பூர், அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளின் இளைஞர் குழுவின் மூலம் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், விளைநிலங்களில் பதிக்கப்பட்ட காஸ் குழாய்க்கு எதிராக போராடியதால் விவசாயிகளுக்கு கிடைத்த இழப்பீட்டு தொகை, போட்டி தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மக்கள் தங்கள் தேவைகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தெரிவிப்பது, மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு மற்றும் கிரானைட் போராட்டம் குறித்து விளக்கினர்.

