/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
23 வகை நாய்கள் தடை விவகாரத்தில் வழிகாட்டி நெறிமுறை வெளியிட எதிர்பார்ப்பு
/
23 வகை நாய்கள் தடை விவகாரத்தில் வழிகாட்டி நெறிமுறை வெளியிட எதிர்பார்ப்பு
23 வகை நாய்கள் தடை விவகாரத்தில் வழிகாட்டி நெறிமுறை வெளியிட எதிர்பார்ப்பு
23 வகை நாய்கள் தடை விவகாரத்தில் வழிகாட்டி நெறிமுறை வெளியிட எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 19, 2024 05:32 AM
கோவை: டில்லி ஐகோர்ட் தீர்ப்பின்படி தடை செய்யப்பட்ட நாய்கள் பட்டியலை திரும்ப பெறுவதோடு இதை வளர்ப்பவர்களுக்கு வழிகாட்டி நெறிமுறை வெளியிட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறி 23 வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்தது. இந்த நாய்களுக்கு கருத்தடை செய்வதோடு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், விற்பனை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டில்லி, கர்நாடகா, தமிழகம் என அந்தந்த மாநில ஐகோர்ட்டில் விலங்கு ஆர்வலர்கள் பலர் வழக்கு தொடுத்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சமீபத்தில் கர்நாடகா மாநில ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஆக்ரோஷமாக கருதக்கூடிய நாய்கள் என பட்டியலிட்டிருப்பதற்கு எந்த ஆதரமும் இல்லை எனவும், இதை வளர்ப்பவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறை வெளியிட வேண்டுமெனவும் கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த மனுதாரர்களில் ஒருவரான'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' தலைவர் தனுராய் கூறியதாவது:
டில்லி ஐகோர்ட்டிலும் தடை செய்யப்பட்ட நாய்கள் பட்டியலை திரும்ப பெற கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கான தீர்ப்பு கடந்த 10ம் தேதி வெளியானது. இதில் அங்கீகாரம் பெற்ற கென்னல் கிளப் உறுப்பினர்கள், தொழில்முறை நாய் வளர்ப்பவர்கள், விலங்கு ஆர்வலர்கள் அடங்கிய குழு உருவாக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரோஷமான நாய்களை வளர்ப்போர், அதற்கு எப்படி பயிற்சி அளிப்பது, பொது இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டு வருதல், பராமரிப்பு முறை குறித்த வழிகாட்டி நெறிமுறை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதை மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.
மேலும் இந்தியாவில் தெருநாய்கடியால் சிகிச்சை பெறுபவர்களே அதிகம். இதன் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் முறையாக தடுப்பூசி போடுதல், நோய்வாய்ப்படும் தெருநாய்களுக்கு காப்பகம் அமைத்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

