/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
/
முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2024 12:32 AM
மதுரை : 'மதுரை மாநகராட்சி பகுதியில் வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்திலுள்ள முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: மாநகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் 15 இடங்களில் இவ்வகை இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றில் அனுமதி, முதியோருக்கு மருத்துவ பரிசோதனை, சத்தான உணவு வழங்கப்படுகின்றனவா உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இல்லங்களில் தங்கியுள்ள முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வகை இல்லங்களை அரசே நடத்த முன்வர வேண்டும். மதுரையில் ரோட்டோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

