/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விதைக்குள் புழு உருவாக்கப்படுகிறதா: வேதனையில் மக்காச்சோள விவசாயிகள்
/
விதைக்குள் புழு உருவாக்கப்படுகிறதா: வேதனையில் மக்காச்சோள விவசாயிகள்
விதைக்குள் புழு உருவாக்கப்படுகிறதா: வேதனையில் மக்காச்சோள விவசாயிகள்
விதைக்குள் புழு உருவாக்கப்படுகிறதா: வேதனையில் மக்காச்சோள விவசாயிகள்
ADDED : ஏப் 24, 2024 06:25 AM
மதுரை : 'விதைத்தபின் முளைக்கும் போதே மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வெளிவருகிறது' என சேடப்பட்டி எஸ். கோட்டைப்பட்டி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: எஸ். கோட்டைப்பட்டியில் 50 விவசாயிகள் 150 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டனர். அறுவடையின் போது ஒரு ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் கிடைக்க வேண்டும்.
இங்கு சராசரியாக 1200 கிலோ அளவே மகசூல் எடுக்கிறோம். கடந்தாண்டு அதிக மழை பெய்ததால் பாதியளவு மக்காச்சோள பயிர் பாதித்தது. மீதி பயிர்கள் வளரும் போதே படைப்புழு தாக்குதலுக்கு உள்ளானது.
இங்கு காட்டுப்பன்றிகளின் தொந்தரவும் அதிகம். வனவிலங்குகள் சட்டத்தால் காட்டுப்பன்றியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவற்றை விரட்டும் தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறை எந்த தகவலும் தெரிவிப்பதில்லை.
இவற்றை சமாளித்து மிஞ்சும் பயிரை அறுவடை செய்தால் 6 மாத காத்திருப்பால் நஷ்டமே ஏற்படுகிறது. உழைத்த கூலிகூட கிடைப்பதில்லை.
பெரும்பாலான விதையை தனியார் நிறுவனத்திடமே வாங்குகிறோம். மூன்றாண்டுகளாக இவ்விதைகளில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது. விதை உற்பத்தியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் பயிர் இழப்பின் போது நிவாரணமாவது கிடைக்கும்.
ஆவணியில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்கிறோம். அறுவடை முடிந்த நிலையில் மாற்று பயிர் திட்டத்திற்கு விவசாயிகள் ஒத்துக் கொள்வதில்லை. மாற்றுப் பயிர், தரமான விதை, காட்டுப்பன்றியை விரட்டும் தொழில்நுட்பம் குறித்து வேளாண் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

