/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊருக்கே உபதேசம்.. வனத்துறைக்கு இல்லீங்கோ
/
ஊருக்கே உபதேசம்.. வனத்துறைக்கு இல்லீங்கோ
ADDED : ஜூலை 17, 2024 12:31 AM
மதுரை : தீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை வனத்துறை அலுவலக வாசலிலேயே 'ஊருக்கு மட்டும் உபதேசம்; தனக்கில்லை என்பது போல' குப்பையை தீயிட்டு எரித்துள்ளனர்.
வனத்தில் தீப்பற்றுவதற்கு யாரும் காரணமாகக் கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது வனத்துறை. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தின் வாசலில் மரங்களும், செடி, கொடிகளும், மின்வயர்களும் செல்கின்றன. ஆடிக்காற்றில் அனைத்தும் பறந்து கொண்டிருக்கும் நிலையில், எந்த அச்சமும் இன்றி கூட்டிப் பெருக்கி சேர்த்த சருகு, குப்பையை வாசலில் இரண்டு இடங்களில் தீயிட்டு எரித்துள்ளனர்.
தீவைத்த போது காற்றின் வேகத்தில் நெருப்பு பொறிகள் பறந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். குப்பை மேலாண்மை செய்வதை ஊழியர்களுக்கு அதிகாரிகள் கற்றுத்தரவேண்டும்.

