/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கோயில்களை சுற்றிப்பார்க்க பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
மதுரை கோயில்களை சுற்றிப்பார்க்க பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
மதுரை கோயில்களை சுற்றிப்பார்க்க பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
மதுரை கோயில்களை சுற்றிப்பார்க்க பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 08, 2024 04:18 AM
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலை மையமாக வைத்து மதுரையில் உள்ள முக்கிய கோயில்களுக்கு ஒரே நாளில் சென்றுவரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோயில், சோலைமலை முருகன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மேலமாசி வீதி மதனகோபால சுவாமி கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் கோயில், ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்கள் உள்ளன.
ஒரே நாளில் இக்கோயில்களுக்கு செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கினால் இந்த கோடை விடுமுறையில் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இதுகுறித்து அறநிலையத்துறையும் கவனம் செலுத்த வேண்டும்.