ADDED : மே 14, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சிம்மக்கல் அருகே யானைக்கல் பகுதியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த சலவை கருப்பணசாமி, காமாட்சி அம்மன் கோயில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனால் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குலதெய்வ வழிபாடு, பூஜை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சிலர் முறையிட்டனர். நீதிமன்ற உத்தரவுபடி நேற்று போலீஸ் துணையுடன் கோயிலை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

