ADDED : ஆக 20, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், பிறந்த முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் 20 பயனாளிகள் முன்பருவக் கல்வி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் மையத்தின் கதவை உடைத்து மையத்திற்குள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். இதனால் மைய பணியாளர்கள், பயனாளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார் பாலகிருஷ்ணன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தெரசா ஆகியோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

