/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய அரசின் சி.ஏ.சி.பி., கமிஷனில் விவசாயிகளையும் நியமிக்க வேண்டும் பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஏப் 12, 2024 05:10 AM
மதுரை:மத்திய அரசின் விவசாய செலவு மற்றும் விலைகள் கமிஷனுக்கு (சி.ஏ.சி.பி.) அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கி 3 ல் ஒரு பங்கு உறுப்பினர்களை விவசாயிகளாக நியமிக்க வேண்டும் என பாரதிய கிசான் சங்க தேசிய துணைத் தலைவர் பெருமாள் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: விவசாயத்தில் உற்பத்திக்கான செலவு விலை, விவசாய நிலத்தின் வாடகை, விவசாயி மற்றும் குடும்பத்திலுள்ள மற்ற அங்கத்தினரின் சம்பளத்தை கணக்கிட்டு அதற்கேற்ப எம்.எஸ்.பி. எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். வியாபாரிகள் எம்.எஸ்.பி., விலையை விட குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கினால் தண்டனைக்குரிய குற்றமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
வெளி மார்க்கெட்டில் எம்.எஸ்.பி. விலைக்கு வாங்குபவர் கிடைக்காவிட்டால் அரசே தானியங்களை கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தவேண்டும்.
மத்திய அரசின் சி.ஏ.சி.பி., கமிஷனிற்குஅரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். டிராக்டர் டிரைவர், நடவு இயந்திர டிரைவர்கள் 'ஸ்கில்டு லேபர்' வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.1200. இவர்களுக்கு ரூ.290 சம்பளம் என சி.ஏ.சி.பி., கமிஷனில் குறிப்பிட்டு உற்பத்தி செலவை குறைக்கின்றனர்.
ஆனால் விவசாயிகளின் கணக்கில் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இதை கண்காணிக்க சி.ஏ.சி.பி., தலைவர் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளை நியமிக்க வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் தானியங்கள் பொது விநியோகத் திட்டத்திற்கு மேல் எஞ்சியிருந்தால் அவற்றை அரசே வியாபாரிகளிடம் விற்கும் முறையை கொண்டுவர வேண்டும் என்றார்.