/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளுத்ததெல்லாம் பால் அல்ல...வெண்மையில் எத்தனை கலப்படம்: வீட்டிலேயே இருக்குதுங்க ஆய்வகம்
/
வெளுத்ததெல்லாம் பால் அல்ல...வெண்மையில் எத்தனை கலப்படம்: வீட்டிலேயே இருக்குதுங்க ஆய்வகம்
வெளுத்ததெல்லாம் பால் அல்ல...வெண்மையில் எத்தனை கலப்படம்: வீட்டிலேயே இருக்குதுங்க ஆய்வகம்
வெளுத்ததெல்லாம் பால் அல்ல...வெண்மையில் எத்தனை கலப்படம்: வீட்டிலேயே இருக்குதுங்க ஆய்வகம்
ADDED : ஏப் 12, 2024 05:09 AM

பேக்கரி, உணவகம், ரோட்டோர கடைகளில் மத்திய அரசு அனுமதிக்காத செயற்கை வண்ணங்களை கலந்து உணவுப்பொருள்சமைக்கப்படுகிறது. இவற்றை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல்செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் வெள்ளை நிறத்தில் உள்ள பால், வெண்ணெய், பனீர் தயாரிப்பில் செய்யப்படும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு இல்லை.
குறைந்த விலையில் கிடைக்கும் உணவுப்பொருட்களின் தரத்தை அறியாமல் அவற்றை சாப்பிடும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டில் (2023 - 2024 ) பால், பட்டர், பனீர் பொருட்களின் 43 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் 35 மாதிரிகள் தரமுள்ளதும், 8 மாதிரிகள் தரம் குறைந்ததும் கண்டறியப்பட்டது.
வெள்ளைநிற உணவுப்பொருட்களில் கலப்படம் செய்துள்ளதை எளிய பரிசோதனைகளின் மூலம் வீட்டிலேயே தரத்தை கண்டறியலாம் என உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன்.
அவர் கூறியதாவது:
பாலில் தண்ணீர் இருப்பதை கண்டறிய ஒரு சொட்டு பாலை சுத்தமான சாய்வான தளத்தில் விட வேண்டும். பாலாக இருந்தால் வெள்ளைத்தடம் பதித்து மெதுவாக கீழே செல்லும். தண்ணீர் இருந்தால் வெள்ளைத்தடமின்றி நேரடியாக கீழே செல்லும். 5 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்க வேண்டும்.
சலவைத்துாள் கலந்திருந்தால் தடிமனான படலம் உருவாகும். இல்லாவிட்டால் மெல்லிய படலமாக தெரியும். பால்பொருட்கள், பனீரில் கலப்படம் இருப்பதையும் கண்டறியமுடியும். 3 மில்லி பால் அல்லது பால் பொருட்களுடன் 5 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட வேண்டும்.
இதில் 2 அல்லது 3 சொட்டு டிங்சர் அயோடின்சேர்க்கும் போது கலவை நீல நிறமானால் ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்டுள்ளதென அர்த்தம்.இல்லாவிட்டால் வெள்ளைநிறம் மாறாது.
வெண்ணெய், நெய்யில்பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் ஸ்டார்ச் கலந்திருக்கலாம். கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய் எடுத்து 2 அல்லது 3 சொட்டு டிங்சர் அயோடின் சேர்த்தால் நீலநிறமாக மாறும். சுத்தமான வெண்ணெய், நெய்யில் நிறம் மாறாது.
எளிய முறைகளின் மூலம் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்து வாட்ஸ் அப்பில் 94440 42322ல் புகார் செய்யலாம் என்றார்.

