/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
133 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
/
133 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
133 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
133 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் உறுதி
ADDED : ஏப் 06, 2024 05:19 AM

மதுரை : ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்த 133 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்'' என மதுரை வேட்பாளர் டாக்டர் சரவணன் உறுதி அளித்தார்.
நேற்று கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் திருமோகூர், புதுதாமரைப்பட்டி, பூலாம்பட்டி, மாங்குளம், அப்பன்திருப்பதி, வண்டியூர், ஒத்தக்கடை, உத்தங்குடி பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
சரவணன் பேசியதாவது: எம்.பி., வெங்கடேசன் 3 மாதங்களுக்கு முன் 5 ஆண்டுகளில் திட்டப்பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டதாக கூறினார். தற்போது 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதாக கூறுகிறார். தமிழகத்தில் ஒன்று கேரளாவில் ஒன்று என வெங்கடேசன் இரட்டை வேடம் போடுகிறார்.
பொதுச்செயலாளர் பழனிசாமி 133 வாக்குறுதிகளை குறிப்பாக விவசாயிகளுக்கு கூறியுள்ளார். அவர் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், விதை, உரத்திற்கு ஜி.எஸ்.டி., ரத்து, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5000, கரும்பு குவிண்டல் ஒன்றுக்கு ரூ.6000, விவசாயிகள் ஓய்வூதியமாக ரூ.5000 வழங்கப்படும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். 2026 தேர்தலில் பழனிசாமி மீண்டும் முதல்வராவார். அதற்கு அச்சாரம்தான் இத்தேர்தல். இவ்வாறு பேசினார்.
எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, வாசு, கணேசன், நிலையூர் முருகன், கலைப் பிரிவு செயலாளர் அரசு, பகுதி கழக செயலாளர் செந்தில்குமார், ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திக், சேனாபதி பங்கேற்றனர்.

