/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.15.97 கோடி மதிப்பிலான பணிகள் முதல்வர் காணொலியில் திறப்பு
/
ரூ.15.97 கோடி மதிப்பிலான பணிகள் முதல்வர் காணொலியில் திறப்பு
ரூ.15.97 கோடி மதிப்பிலான பணிகள் முதல்வர் காணொலியில் திறப்பு
ரூ.15.97 கோடி மதிப்பிலான பணிகள் முதல்வர் காணொலியில் திறப்பு
ADDED : பிப் 28, 2024 02:30 AM
ஓசூர்:ஓசூர்
அருகே பேகேப்பள்ளியில், 13.88 கோடி ரூபாய் மதிப்பில், துணை
மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கால்நடை பராமரிப்பு
துறை சார்பில், மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில், 2.09 கோடி ரூபாய்
மதிப்பில், இனவிருத்தி காளைகளை தனிமைப்படுத்த புதிய கட்டடம்
கட்டப்பட்டுள்ளது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அதன் பின், மாவட்ட கலெக்டர் சரயு
குத்துவிளக்கேற்றி வைத்து, துணை மின்நிலையத்தை பார்வையிட்ட பின்
பேசுகையில், ''புதிய பேகேப்பள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து,
15,100 வீட்டு மின் இணைப்புகள், 1,100 தொழில்சாலைகளுக்கான
இணைப்புகள், 220 விவசாய இணைப்புகள், 120 வர்த்தகத்திற்கான மின்
இணைப்புகள் என மொத்தம், 16,440 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் காளைகள் மூலம், கால்நடை
பண்ணையில் உள்ள பொலி காளைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, 60
நாட்கள் வரை காளைகளை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். அதற்காக
தனியாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது,'' என்றார்.
ஓசூர் சப் கலெக்டர்
பிரியங்கா, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார்,
செயற்பொறியாளர்கள் குமார், பழனி, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

