/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
39,761 குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம்
/
39,761 குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம்
ADDED : அக் 28, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கும் முகாம் நேற்று துவங்கி வரும் நவ., 1 வரை நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 6 மாதம் முதல், 5 வயது வரை உள்ள, 1.4 லட்சம் குழந்தைகளுக்கு 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது. இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில், 6 முதல், 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒரு மில்லி அளவும், 12 மாதம் முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்தில், 1,40,766 குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளான நேற்று, 39,761 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள முகாம்களை அணுகி, தங்கள் குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கி, உடல் நலனை பேணி பாதுகாத்து கொள்ள, கலெக்டர் தினேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

